யாழில் 30 பேர் உட்பட வடக்கில் 43 பேருக்கு கொரோனா
covid
jaffna
patient
By Vanan
யாழ். மாவட்டத்தில் 30 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகிய இரண்டு ஆய்வுகூடங்களில் 749 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதில் 43 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் 30 பேரும், கிளிநொச்சியில் 4 பேரும், வவுனியாவில் 9 பேரும் என 43 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்