248ஆக அதிகரித்தது யாழ்ப்பாணத்தின் கொவிட் உயிரிழப்பு
யாழ். மாவட்டத்தில் மேலும் ஐவர் கொவிட் -19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சங்கானையைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட வரணியில் 98 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் உயிழந்துள்ளார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொவிட்-19 தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த கட்டுவனைச் சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொவிட்-19 தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 100 வயதுடைய ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலம் மந்திகை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்றுள்ளமை கண்டறிப்பட்டது.
அல்வாய் மேற்கு திக்கத்தைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில், மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கும் கொவிட் -19 தொற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொவிட் -19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248ஆக உயர்வடைந்துள்ளது.