யாழ் கலாசார நிலையம் திறப்பு - பிரதமர் மோடி, தமிழ், சிங்கள மொழியில் வெளியிட்ட பதிவு
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான நெருக்கமான கலாசார ஒத்துழைப்பை அடையாளப்படுத்தும் ஒரு முக்கிய செயற்றிட்டமாக யாழ்ப்பாணம் கலாசார நிலையம் காணப்படுகிறது. இத்திட்டத்தினூடாக பெருமளவான மக்கள் நன்மையடைவரென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தினூடாக வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அதியுயர் பிரசன்னம் யாழ்.கலாசார நிலையம் திறப்பு விழாவை மேலும் சிறப்பித்துள்ளது.
நெருக்கமான கலாசார ஒத்துழைப்பு
(
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கமான கலாசார ஒத்துழைப்புக்களை அடை யாளப்படுத்தும் ஒரு முக்கிய செயற் திட்டமாக யாழ்ப்பாணம் கலாசார நிலையம் காணப்படுகிறதென்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார நிலையத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
இந்தியா வழங்கும் ஒத்துழைப்பு அளப்பரியது

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்தியா வழங்கும்
ஒத்துழைப்பு அளப்பரியது. இலங்
கையும் இந்தியாவும் ஒரு நாணயத்
தின் இரு பக்கங்களை போல் செயற்
பட வேண்டுமென அதிபர்
ரணில் விக்ரமசிங்க யாழ். கலாசார
நிலையம் திறப்பு விழாவின் போது
தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.