யாழ்ப்பாணத்தில் நடை பயிற்சிக்காக சென்றவர் சடலமாக மீட்பு
கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் காணாமற்போயிருந்த நிலையில் இரண்டு நாட்களின் பின்னர் நேற்று நவாலியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த மாணிக்கம் ஜெயக்குமார் (வயது-51) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரை செவ்வாய்க்கிழமை காலை 6 மணி தொடக்கம் காணவில்லை என குடும்பத்தினர் மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு வழங்கியிருந்தனர்.
இந்த நிலையில், இரண்டு நாள்களின் பின்னர் அவர் இன்று நவாலிப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மன விரத்திக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கவுள்ளது.
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 3 மணி நேரம் முன்