அர்ச்சுனா - இளங்குமரன் இடையே அமளிதுமளி : கூட்டத்தில் வெடித்த வாக்குவாதம்
நடைபெற்று வரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நாடளுமன்ற உறுப்பினரான இளங்குமரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தற்போது யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்தநிலையில், கூட்டத்தில் தனிப்பட்ட விடயத்தை முன்னிறுத்தி இளங்குமரன் மற்றும் அர்ச்சுனாவிற்கு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியுள்ளது.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அர்ச்சுனா, அண்மையில் நாடளுமன்ற உறுப்பினரான இளங்குமரன் நாட்டின் சனத்தொகை குறித்து தெரிவித்த கருத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.
அத்தோடு, நாடளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்னிருந்தி இருந்தார்.
இதற்கு பதிலளித்த இளங்குமரன், அண்மையில் நாடளுமன்றத்தில் நாடளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பெண்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்களை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்தநிலையில், இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றவரது காதல் விடயங்கள், மோசடி மற்றும் பெண்களை ஏமாற்றிய கத்சிகள், நிதி மோசடிகள் உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தி நூற்றுக்கணக்கான அதிகாரிகள் முன்னிலையில் குடும்பச் சண்டையிட்டனர்.
இந்நிலையில், குறித்த விவாதத்தை இடை நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஒருங்கிணைப்பு குழு தலைவரிடம் வலியுறுத்தினார்.
ஆனால், ஒருங்கிணைப்பு குழு தலைவர் குறித்த இருவரையும் கட்டுப்படுத்த முடியாது ஆழுமையற்றவராக காணப்பட்டார்.
ஒருங்கிணைப்பு குழு தலைவரின் ஆழுமையற்ற நிலையை அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூட்டத்தை விடு வெளியேறி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 15 மணி நேரம் முன்
