யாழில் கோர விபத்தொன்றில் பலியான குடும்பப் பெண்: இளைஞன் படுகாயம்
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கச்சாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இளைஞர் ஒருவர் படு காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து, இன்று(21) கொடிகாமம் கச்சாய் வீதியில் இடம்பெற்றுள்ளது.
குடும்பப் பெண்ணொருவரும் அவரது உறவு முறையான இளைஞர் ஒருவரும் மோட்டார் சைகிளில் கச்சாய் வீதி ஊடாக கொடிகாமம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை அதே திசையில் சட்டவிரோத மணல் ஏற்றிக்கொண்டு சென்ற உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தப்பிச் சென்ற உழவு இயந்திரம்
விபத்தையடுத்து அந்த உழவு இயந்திரம் தப்பிச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் கெற்பேலி மேற்கு மிருசுவிலைச் சேர்ந்த நந்தகுமார் ஜெயலக்சுமி என்ற 46 வயதுடைய குடும்பப் பெண் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, குறித்த பெண்ணின் உறவு முறையான 22 வயதுடைய இளைஞரான கனகலிங்கம் செந்தூரன் என்பவர் படு.காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட அங்கிருந்து மேலதிக சிகைச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளைக் கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
