யாழில் அதிகரிக்கும் கொவிட் உயிரிழப்பு- இன்றும் ஐவர் பலியெடுப்பு
jaffna
increase
coronadeath
By Sumithiran
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் மூவர் உள்பட மாவட்டத்தில் மேலும் 5 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நல்லூரைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவரும் நெல்லியடியைச் சேர்ந்த 64 வயதுடைய ஆண் ஒருவரும் சுன்னாகத்தைச் சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, மந்திகை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் உள்பட இருவர் உயிரிழந்தனர் என்று இன்று காலை செய்தி வெளியிடப்பட்டது.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 236ஆக உயர்வடைந்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி