யாழ் நகரில் நடைபெறவுள்ள வட இலங்கையின் முதன்மையான மாபெரும் வர்த்தகக் கண்காட்சி!
வட இலங்கையின் முதன்மையான மாபெரும் வர்த்தகக் கண்காட்சியான 2026 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
அதன்படி, 16 ஆவது வருடமாக நடைபெறும் குறித்த கண்காட்சி எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது.
வர்த்தக திருவிழா
இது வட இலங்கையின் மிகப்பெரிய வருடாந்த வர்த்தக திருவிழாவாக விளங்குகின்றது.

“சர்வதேச தரத்திலான உங்கள் வர்த்தக வளர்ச்சிக்கான நுழைவாயில்” குறித்த வர்த்தகக் கண்காட்சியில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த, வியாபார கூட்டாளர்களை அடையாளம் காண, ஏற்றுமதி வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழில் முயற்சியாளர்கள், வர்த்தக வல்லுனர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களை ஒன்றிணைத்து பொருளாதார நிகழ்வாக நடைபெறவுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியில், காட்சிக்கூடங்களை உடனடியாக பதிவு செய்வதன் மூலம் உங்கள் வர்த்தகங்களை சர்வதேச தரத்திற்கு கெண்டுசெல்வதற்கான அத்திவாரத்தினை இட்டுக் கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |