சிங்களம் உள்வாங்கப்படாதது ஏன்? காரணத்தை வெளியிட்டது இந்திய துணைத் தூதரகம்
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் பெயர்ப் பலகையில் சிங்கள மொழி உள்ளடக்கப்படாமை குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக இந்திய துணைத் தூதரகத்தை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்திக் குறிப்பில்,
யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகத்தின் பிரதான பெயர்ப் பலகையில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் மட்டுமே துணைத்தூதரகம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
சிங்கள மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விகளைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் 90 விதமான மக்கள் தமிழர்கள் என்ற காரணத்தினால் சிங்கள மொழியை பெயர்ப்பலகையில் உள்ளடக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை என இந்திய துணைத் தூதரக தகவல்கள் தெரிவித்துள்ளன - என்றுள்ளது.
இருப்பினும் இந்திய துணைத் தூதரகம் குறித்த பிரதான பெயர்ப் பலகையினை அகற்றியிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


