யாழ். நூலகத்தை டிஜிட்டல் மயப்படுத்த ஈபிடிபி வலியுறுத்து!
இந்த தாண்டு வரவு செலவு திட்டத்தில் யாழ். நூலகத்திறகாக ஒதுக்கப்பட்ட நிதியில் நூலகத்தை டிஜிட்டல் மயப்படுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) வலியுறுத்தியுள்ளது.
யாழ். ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, கடந்த வருட வரவு செலவு திட்டத்தினை ஒத்த வரவு செலவுத் திட்டம் ஒன்றே வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக எதிர்பார்த்தவாறு, பெரும்பாலும் அவ்வாறான வரவு செலவுத் திட்டம் ஒன்றே ளெியாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீதி புனரமைப்பு பணிகள்
அதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், “வடக்கினை பொறுத்த வரையில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்மான வீதிககளை முழுமையாக திருத்துவதற்கு சுமார் 10000 மில்லியன் ரூபாய் தேவை என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
அவற்றுள் வட்டுவாகல் பாலம் மற்றும் குறிகட்டுவான் இறங்குதுறை போன்றவை உள்ளடக்கப்படவில்லை, ஆனால் தற்போது வட்டுவாகல் பாலம் மற்றும் இறங்குதுறை உள்ளடக்கி 5000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே முன்னுரிமை அடிப்படையில் வீதிகள் தெரிவு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
டக்ளஸின் எதிர்பார்ப்பு
பூநகரி கௌதாரிமுனை வீதி, கிராஞ்சி, வலைப்பாடு போன்ற பகுதிகளுக்கான வீதி போன்ற பிரதான வீதிகளும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
அதேபோன்று, யாழ். நூலகத்திற்கு முன்மொழியப்ட்டுள்ள 100 மில்லியன் ரூபாய்களும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காகவும் கணினி வசதிகளை அதிகரிப்பதற்காகவும் முன்மொழியப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.
அதைவிட, தென்னாசியாவில் சிறந்த நூலகமாக காணப்பட்ட எமது நூலகத்தினை டிஜிற்றல் மயப்படுத்துவதற்கு இந்த நிதி பயன்படுத்துவதன் மூலம் தென்னாசியாவின் தலை சிறந்த நூலகங்களுள் ஒன்றாக விளங்கிய எமது நூலகத்திற்கு இன்னுமொரு பரிமாணத்தினை வழங்க முடியும் என்பதே எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் சிந்தனையாக இருக்கின்றது.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
