தென்மராட்சியில் மக்களுக்கு சொந்தமான காணியை இராணுவத்துக்கு அபகரிக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம்
srilanka
jaffna
protest
By Kanagasooriyam
யாழ்ப்பாணம் மிருசுவில் எழுதுமட்டுவாழ் வடக்கில் மக்களுக்கு சொந்தமான காணியை இராணுவத்தின் 52 வது படையணியின் தலைமையகம் அமைப்பதற்காக சுவீகரிப்பதற்கு அளவீடு செய்ய முயன்ற போது ஏ9 பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அளவீட்டு நடவடிக்கையை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
எழுதுமட்டுவாழ் வடக்கு(ஜே.34) கிராம சேவகர் பிரிவில் மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றப் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 40 ஏக்கர் காணியை இராணுவத்தின் 52ஆவது படையணியின் முகாம் அமைப்பதற்காக நில அளவை செய்து அபகரிக்கும் முயற்சி இன்று காலை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சுவீகரிப்பு முயற்சியை அறிந்த காணி உரிமையாளர்கள் அரசியல்வாதிகள் சமூக ஆர்வலர்கள் காலை 9.00 மணி முதல் ஏ9 பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து இந்த அபகரிப்பு முயற்சி கைவிடப்பட்டது.



10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்