சர்வதேச நீதிமன்றில் ஸ்ரீலங்காவை நிறுத்து- யாழில் மாபெரும் பேரணி!
srilanka
jaffna
protest
nallur
By Vasanth
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஸ்ரீலங்காவை நிறுத்தக்கோரி, யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று இடம்பெறுகின்றது. இந்தப் போராட்டத்தில், தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு, போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு கிழக்கு பல்கழலைக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்
இந்நிலையிலேயே குறித்த போராட்டம், கிட்டுப்பூங்காவில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகி பேரணியாகச் சென்று நல்லை ஆதீனம் முன்பாக சென்றடைந்துள்ளது.
இந்நிலையில், குறித்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பெருந்திரளானோர் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.