தேசிய விளையாட்டு விழாவில் சாதனை படைத்த ஈழத்தமிழன்
அகில இலங்கை ரீதியில் நடைபெறும் 48 வது தேசிய விளையாட்டு விழாவில் வடக்கு மாகாண வீரர் சேர்ந்த அருந்தவராசா புவிதரன் புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தநிலையில், யாழ் சாவகச்சேரியினை சேர்ந்த இவர் குறித்த போட்டியில் 5.11மீற்றர் உயரத்தினை கடந்து தனது புதிய சாதனையை படைத்துள்ளார்.
48 ஆவது தேசிய விளையாட்டு விழா கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற நிலையில் இதில் நாட்டிலுள்ள ஒன்பது மாகாண வீர வீராங்கனைகள் பங்குபற்றினர்.
கோலூன்றிப்பாய்தல்
இதனடிப்படையில், இப்போட்டிகளில் கோலூன்றிப்பாய்தல் ஆண்கள் பிரிவில் சாவகச்சேரியினைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன் 5.11M உயரத்தினை கடந்து புதிய தேசிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார்.
மேலும், கோலூன்றிப்பாய்தல் பெண்கள் பிரிவில் சாவகச்சேரியினைச் சேர்ந்த நேசராசா டக்ஸிதா 3.51M உயரத்தினைக் கடந்து புதிய தேசிய சாதனையினை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
