யாழில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்! பொலிஸ் அதிகாரியின் விரலைக் கடித்த இளைஞன்
srilanka
police
jaffna
By Vasanth
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் பொலிஸாரின் கை விரலை கடித்ததாக தெரிவித்து யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில். யாழ்.ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள நாகவிகாரையில் இரவுக் கடமையிலிருந்த பொலிஸாருக்கும் அங்கு பணிபுரிந்த இளைஞனுக்கும் இடையில் இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது .
வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் பொலிஸாரின் கை விரலை குறித்த இளைஞன் கடித்துள்ளார்.
காயத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரி யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், விரலை கடித்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்