"உங்களுக்காக நாம்" யாழ் காவல்துறையினர் விசேட வேலைத்திட்டம் (Photos)
வீதி விபத்துக்களை குறைப்பதற்காக "உங்களின் பாதுகாப்பிற்காக நாம்" எனும் கருப்பொருளில் துவிச்சக்கர வண்டிகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டும் நடவடிக்கை யாழ். மாவட்டத்திலுள்ள பல இடங்களில் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் சுன்னாகம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கே.கே.எஸ் பிரதான வீதியிலுள்ள சுன்னாகம் சந்தியில் வைத்து வீதியினால் சென்ற துவிச்சக்கர வண்டிகள் காவல்துறையினரால் நிறுத்தப்பட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட காவல் நிலையங்களுக்கு பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரின் ஆலோசனைக்கமைவாக, மாவட்ட காவல்துறை போக்குவரத்து பிரிவு மற்றும் சுன்னாகம் காவல்துறை போக்குவரத்து பிரிவும் இணைந்து இந்த நடவடிக்கையினை இன்று முன்னெடுத்திருந்தனர்.
இன்று இடம்பெற்ற ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கையில் சுன்னாகம் காவல் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி உப காவல்துறை பரிசோதகர் ஈ.எம்.பி.ஏக்கநாயக, யாழ். மாவட்ட போக்குவரத்து காவல்துறை பிரிவின் உப காவல்துறை பரிசோதகர் பிரியந்த அபேயரத்ன உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

