பார்வையிழந்த மூதாட்டியின் துயரம்! ஒருவேளை உணவிற்கு போராட்டம் (காணொளி)
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் 75 வயதிற்கும் அதிகமான வயதுடைய முதியவர் ஒருவர் நிரந்தர வீடு இன்றி வாழ்ந்து வருகின்றார்.
அவர் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் தற்காலிக கொட்டகை ஒன்றில் வாழ்கின்றார். இவர் ஒரு வேளை உணவினைப் பெற்றுக் கொள்வதற்கே பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றார்.
இந்த முதியவர் தற்போது புளியம் பழத்தினை சேகரித்து ,அதை உடைத்து விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்தே வாழ்க்கையை நடத்திச் செல்கின்றார்.
இவருடன் இரண்டு 18 வயதிற்கும் பேரப்பிள்ளைகளும் தங்கி வாழ்கின்றனர். யுத்த்தில் இரண்டு பேரப்பிள்ளைகளின் பெற்றோர் இற்நதுவிட்டனர்.
தனக்கு கடந்த ஜந்து வருடகாலமாக இரண்டு கண்பார்வையும் இழந்துள்ளார். இந்த நிலையில் தாங்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர் கண்ணீரோடு தெரிவிக்கின்ற வார்த்தைகள் காணொளியில்....
