யாழ் ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் கண்கலங்கவைத்த சம்பவம்
SRILANKA
jaffna
protest
disappearances
By Vasanth
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஸ்ரீலங்காவை நிறுத்தக்கோரி, யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் கவனவீர்ப்புப் பேரணி இடம்பெற்றது. வடக்கு கிழக்கு பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்களின் ஏற்பாட்டில் இந்தப்பேரணி இடம்பெற்றது. இந்தப் போராட்டத்தில் காணாமற் போன உறவுகளின் தாய்மாரும் கலந்து கொண்டு தமது உணர்வை வெளிப்படுத்திய
விதம் காண்போரை கண்கலங்க வைத்தது.
அவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நடந்ததென்ன கேள்வியெழுப்பி நிலத்தில் வீழ்ந்து கதறி அழுதது கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக்கூட கண்கலங்க வைத்தது