நாடாளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணிக்காக சிறை விதிகள் மாற்றப்பட்டதா..!
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ்.நகரில் போராட்டம் நடத்திய தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் பிரபல சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் உள்ளிட்ட 18 பேர் யாழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் யாழ் சிறைச்சாலையில் தடுப்புக்காவலிலுள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஆனால், அவர்களது புகைப்படங்கள் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.



இவ்வாறு தடுப்புக்காவலில் உள்ள கனகரட்ணம் சுகாசும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர் ஒருவரும் தமது கைகளில் தொலைபேசிகளை பயன்படுத்தும் புகைப்படங்கள் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
இவர்களுக்காக சிறை விதிகள் மாற்றப்பட்டுள்ளனவா? இவர்கள் வசதி வாய்ப்புகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா..? என நெட்டிசன்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
