நட்சத்திர விடுதியில் சட்டவிரோத மதுபானக் களஞ்சியம்: ஒருவர் கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
By Kajinthan
யாழில் 97 வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.
பண்டத்தரிப்பு - சில்லாலை பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியிலிருந்து இந்தப் போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கை நேற்று (23-03-2026) காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இதன்போது சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சித்தங்கேணி மதுவரி நிலையத்தினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடுதியில் மதுபான விற்பனைக்கான அனுமதி இல்லாத நிலையிலேயே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 34 நிமிடங்கள் முன்
இதயபூமி எனப்படும் மணலாற்றை பலியெடுத்த பேரினவாதம்…!
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்