யாழ்.யூடியூபரின் திருகுதாளங்கள் : அம்பலமாகும் பாரிய மோசடிகள்
சமூக வலைதளங்களில் உதவியின் பெயரில் இயங்கும் யூடியூப்தளங்கள் தொடர்பில் அண்மைக்காலமாக பலதரப்பட்ட சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.
வறுமைக் கோட்டிற்கு கீழ் இயங்கும் குடும்பங்களுக்கு உதவி செய்வதாக கூறி பண மோசடி மற்றும் முறையற்ற நடத்தை அத்துடன் வார்த்தை உபயோகம் என்பன மேற்கொள்கின்றமை கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவதாக காணப்பட்டது.
இதில் பெரும்பாலும் வடக்கில் புலம்பெயந்தோரின் பணத்தை உதவி என்ற போர்வையில் பெற்று மக்களை அநாகரிகமாக நடத்துவது என்பது யூடியூபர்களின் வழக்கமாக இருந்தது.
இந்தநிலையில், அண்மையில் இவ்வாறான பிண்னணியில் யாழில், (Jaffna) உதவி செய்யும் முகமாக இளம் பெண்ணொருவரை வற்புறுத்தி காணொளி எடுக்க முயலும் “SK vlog“ என்ற யூரியூப் தளத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டதுடன் இவ்விடயம் பாரிய சர்ச்சையை கிளப்பி இருந்தது.
இதையடுத்து, அனைத்து யூடியூப்தளங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த SK vlog யூடியூப்தளம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகளை மக்கள் முன்வைத்திருந்ததுடன் தொடர்ச்சியாக அனைத்து சமூக ஊடகங்கள் உட்பட செய்தி வரை இந்த விடயம் பாரிய அதிர்வலையை கிளப்பி இருந்தது.
இதனடிப்படையில், இவ்விடயம் தொடர்பிலும் மற்றும் இதற்கான பின்னணி குறித்தும் இலங்கையை பிறப்பிடமாக கொண்டு இலங்கையில் நலன் உதவி திட்டங்களை மேற்கொண்டு வரும் மின்னல் செந்திலுடனான கருத்துக்களுடன் வருகின்றது லங்காசிறியின் இன்றைய நேர்காணல்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 2 வாரங்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்