ஹமாஸ் இராணுவ உளவுத்துறைத் தலைவரை வீழ்த்தியது இஸ்ரேல்!
தெற்கு காசாவில் ஹமாஸின் இராணுவ உளவுத்துறைத் தலைவரை கொன்றதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
அத்தோடு, குறித்த ஹமாஸ் தலைவரின் பெயர் ஒசாமா தபாஷ் என்றும் இஸ்ரேல் இராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
போர்நிறுத்தம்
அவர் ஹமாஸ் அமைப்பின் கண்காணிப்பு மற்றும் இலக்கு பிரிவின் தலைவராக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான பணயக் கைதிகள் பரிமாற்ற போர்நிறுத்த காலம் நிறைவடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் இராணுவம் காசா மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளது.
முக்கிய தலைவர்கள் கொலை
இவ்வாறானதொரு பின்னணியில், சில நாட்களாக ஹாமஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதன்படி, இஸ்ரேல் இராணுவத்தால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காசாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குல்களின் அடுத்தடுத்து ஹமாஸ் அமைப்பின் பல தலைவர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.'
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்