பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் காலமானார்
Boxing
Olympic Academy
United States of America
World
By Thulsi
அமெரிக்காவைச் (USA) சேர்ந்த பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் ஃபோர்மேன் ( George Foreman) காலமானார்.
ஜார்ஜ் ஃபோர்மேன் தனது 76 வயதில் நேற்று (21) காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவர் 2 முறை ஹெவிவெய்ட் சாம்பியனும், உலகின் மிக வயதான ஹெவிவெயிட் (Boxing heavyweight) உலக சாம்பியனுமாக இருந்துள்ளார்.
68 நோக் அவுட் வெற்றிகள்
குத்துச்சண்டை வளையத்தில் 'பிக் ஜார்ஜ்' என்று அழைக்கப்படும் இவர் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
தனது முதல் சாம்பியன்ஷிப்பை வென்ற 21 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது சாம்பியன்ஷிப்பையும் வென்றுள்ளார்.
மேலும், ஃபோர்மேன் குத்துச்சண்டை வாழ்க்கையில் 81 சண்டைகளில் 76 சண்டைகளில் வென்று அந்தப் போட்டிகளில் 68 'நோக் அவுட்' வெற்றிகள் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்
நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்