யாழில் அதிகாலை வேளை வன்முறை கும்பலால் இடம்பெற்ற பயங்கர சம்பவம்!
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இந்த சம்பவம் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருகையில்,
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீதே இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதல்

அச்சுவேலி பத்தமேனி பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் சிந்துஜன் என்பவர் மீதே வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் , விடுதியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அடங்கிய வன்முறை கும்பலே தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.