வடக்கு தொடருந்து பாதை புதுப்பித்தலுக்கு எதிரான வழக்கு - நீதிமன்ற உத்தரவு
வடக்கு தொடருந்து பாதை புதுப்பித்தலின் போது மஹவ - அநுராதபுரம் இடையேயான தொடருந்து நிலையங்களுக்குள் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறி அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்புக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த வழக்கின் தீர்ப்பை செப்டெம்பர் 18 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி நளிந்த ஹேவாவசம் உத்தரவிட்டுள்ளார்.
தொடருந்து பாதை நவீனமயமாக்கல்
குறித்த வழக்கானது மாற்றுத்திறனாளி பெண்கள் சங்கத்தால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Ratynayake), அமைச்சின் செயலாளர் வடக்கு மாகாணம் அநுராதபுரத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்திய கடன் உதவியின் கீழ் வடக்கு தொடருந்து பாதை நவீனமயமாக்கலின் போது மஹவ - அநுராதபுரம் இடையேயான தொடருந்து நிலையங்களை மேம்படுத்துவதில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
