யாழில் வீசிய பலத்த காற்றினால் தூக்கி வீசப்பட்ட கூரைகள்
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - குருநகரில் இன்று (19.1.2025) காலை 6.45 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் தேவாலயத்தை அமைச்சர் சந்திரசேகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இந்த அனர்த்தத்தால் முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி அளவிலும் புனித கொலை விலக்கி மாதா ஆலய திருப்பண்ட அறைகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளன.
அத்தோடு சில படகுகளும் பகுதி அளவில் சேதமாக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு தயாராக உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்திகள் - கஜிந்தன்
இரண்டாம் இணைப்பு
குருநகரில் இன்று காலை 6.45 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் கொலை விலக்கி மாதா ஆலயம் மற்றும் பல வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு சேதமாக்கப்படன.
இந்த அனர்த்தத்தால் முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி அளவிலும் புனித கொலை விலக்கி மாதா ஆலய திருப்பண்ட அறைகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளன.
அத்தோடு சில படகுகளும் பகுதி அளவில் சேதமாக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.
முதலாம் இணைப்பு
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (19) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில், வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
பலத்த காற்று
வட மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மலைகளின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது (30-40) கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுமெனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |