கோர பேருந்து விபத்து : காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 61ஆக அதிகரிப்பு!
புதிய இணைப்பு
மாத்தறையின் கந்தாரா பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 61 ஆக அதிகரித்துள்ளதாக மாத்தறை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் விக்கும் கினிகே தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் ஒரு வெளிநாட்டவரும் மூன்று குழந்தைகளும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், விபத்துக்குப் பிறகு தடைப்பட்ட வீதி தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
மாத்தறை (Matara) - தங்காலை (Tangalle) பிரதான வீதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (19.01.2025) காலை கந்தர, தலல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், எம்பிலிப்பிட்டியவிலிருந்து (Embilipitiya) மாத்தறைக்கும், மாத்தறையிலிருந்து தங்காலைக்கும் பயணித்த இரண்டு பேருந்துகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 29 பேர் கந்தர மருத்துவமனையிலும், மேலும் 6 பேர் மாத்தறை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |