யாழ். பல்கலை மாணவன் மீது தாக்குதல் : மாணவர்கள் நால்வருக்கு எதிராக நடவடிக்கை

Ministry of Education Jaffna University of Jaffna Education University Grants Commission
By Thulsi Apr 01, 2025 08:31 AM GMT
Report

யாழ். பல்கலைக்கழக (University of Jaffnaவிஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நிறுவனமயப்படுத்தப்பட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிரஜன் (P. Ravirajan) தெரிவித்துள்ளார்.

விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதை காரணமாக உட்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவன் மீது மிலேச்சத்தனமான பகிடிவதை

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவன் மீது மிலேச்சத்தனமான பகிடிவதை

சிரேஷ்ட மாணவர்களால் தாக்குதல்

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "எமது பீடத்தைச் சேர்ந்த புதுமுக மாணவன் ஒருவர் சிரேஷ்ட மாணவர்களால் தாக்கப்பட்டமை தொடர்பில் நாம் மிகுந்த வருத்தமடைகின்றோம்.

சம்பவம் தொடர்பாக அறிந்தவுடன் பல்கலைக்கழக சட்ட நிறைவேற்று அதிகாரி, மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருடன் நானும் வைத்தியசாலைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மாணவனை நேரில் பார்வையிட்டதுடன், வைத்திய நிபுணர்களிடமும் கலந்துரையாடினோம்.

பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரிடமிருந்தும், மாணவனிடமிருந்தும் பெறப்பட்ட முதற்கட்டத் தகவலின் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டாம் வருடத்தைச் சேர்ந்த நான்கு சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் - கல்வி அமைச்சின் அறிவிப்பு

பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் - கல்வி அமைச்சின் அறிவிப்பு

மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு 

துணைவேந்தரின் அறிவுறுத்தலுக்கமைய மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பகிடிவதை மற்றும் மாணவர் ஒழுக்காற்று நடைமுறைகள் தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை, பல்கலைக்க்கழக உபவிதிகளுக்கு அமைய, கிடைக்கப்பெறும் விசாரணைக்குழுவின் பரிந்துரைகள் பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் ஊடாகப் பேரவைக்குச் சமர்ப்பிக்கப்படும்.

பேரவைத் தீர்மானத்துக்கமைய குற்றமிழைத்த மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சம்பவம் பல்கலைக்கழகத்துக்கு வெளியே இடம்பெற்றிருப்பதனால் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை வழங்கிய முறைப்பாடுகளுக்கமைய பொலீஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பல்கலைக்கழகம் பூரண ஒத்துழைப்பை வழங்கும்" என்றார்.

செய்திகள் - பிரதீபன்

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவைக்கு ஏற்படவுள்ள சிக்கல்

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவைக்கு ஏற்படவுள்ள சிக்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Chennai, India

07 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985