யாழ் பல்கலை மாணவன் எடுத்த விபரீத முடிவு
Jaffna
Nuwara Eliya
University of Jaffna
By Shalini Balachandran
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் கொட்டகல - புனித அன்ருஸ் தோட்டம் என்ற முகவரியைச் சேர்ந்த கருப்பையா கவிரத்தினம் (வயது 24) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மாணவன் கொக்குவில் - பிரவுண் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்துள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த இளைஞர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கோப்பாய் காவல்துறையினர் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி