பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான யாழ் பல்கலை மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட உத்தரவு
பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், டிசம்பர் பத்தாம் திகதி வரை விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டுள்ளனர் இந்த கைது இடம்பெற்றது.
சந்தேக நபர்கள்
இந்தநிலையில், குறித்த குற்றச்சாட்டில் 19 பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் கடந்த மாதம் 29 ஆம் திகதி கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று (03) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

விளக்கமறியல் காலம் முடிவடைந்த பின்னர் இன்று மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
விசாரணைகளை முன்னெடுத்த மேலதிக நீதிவான் உசைன் சந்தேக நபர்கள் 19 பேரையும் டிசம்பர் பத்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |