யாழில் இணங்கானப்பட்ட வெடிக்காத மோட்டார் வகைக்குண்டு!
யாழ்ப்பாணத்தில் வெடிக்காத மோட்டார் வகைக் குண்டு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.
யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தனிப்பனைப் பகுதியில் நேற்று (07-02-2026) குறித்த குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் வசிக்கும் நபர்கள் ஆடு மேய்ப்பதற்காகக் காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளனர்.
உரிய பாதுகாப்பு
இதன்போது, வெடிக்காத நிலையில் மோட்டார் வகைக் குண்டு ஒன்றினை அவர்கள் அவதானித்துள்ளனர்.
உடனடியாக அந்த நபர்கள் மருதங்கேணி காவல்துறையினருக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர், ஆபத்தான நிலையில் காணப்பட்ட மோட்டார் வகைக் குண்டை உரிய பாதுகாப்புடன் அகற்றுவதற்கான அனுமதியைப் பெறக் கிளிநொச்சி நீதிமன்றத்திற்குத் தகவல் அனுப்பியுள்ளனர்.
இந்தநிலையில், நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரை குறித்த இடத்தில் மருதங்கேணி காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🛑மேலதிக செய்திகள் - பூ.லின்ரன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 18 மணி நேரம் முன்