வலி வடக்கு காணி விடுவிப்பு: அநுர அரசின் ஏமாற்று வாக்குறுதிகள் - கஜேந்திரகுமார் எம்பி சீற்றம்

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Gajendrakumar Ponnambalam NPP Government
By Theepan Oct 01, 2026 09:32 AM GMT
Report

வலி வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கிறோம் என கூறி தமிழ் மக்களை அநுர அரசாஙகம் ஏமாற்றி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

வலி வடக்கு விடுவிக்கப்படாத தனியார் காணிகள் தொடர்பில் அமைச்சர் சந்திரசேகரன் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது ஜனாதிபதியாக இருக்கின்ற அநுரகுமார ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் வந்தபோது பாதுகாப்பு தரப்பினரிடம் இருக்கின்ற மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்படும் என உறுதிமொழி வழங்கினார்.

யாழில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 187.56 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 187.56 ஏக்கர் காணி விடுவிப்பு

மக்களின் காணிகள் 

உறுதிமொழி வழங்கி இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் மக்களின் காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்படாத நிலையில் ஏமாற்றப்பட்ட மக்கள் தையிட்டி பலாலி,வசாவிளான்,மயிலிட்டி ,என தொடர்ச்சியாக நான்கு இடங்களில் ஒவ்வொரு வாரமும் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்.

வலி வடக்கு காணி விடுவிப்பு: அநுர அரசின் ஏமாற்று வாக்குறுதிகள் - கஜேந்திரகுமார் எம்பி சீற்றம் | Jaffna Valikamam North High Security Zone Issues

அநுர அரசாங்கத்தின் அமைச்சரான இராமலிங்கம் சந்திரசேகரன் அண்மையில் தெரிவித்த கருத்தை ஊடகங்களில் பார்த்தேன்.

ஜனாதிபதி தலைமையில் வலி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் மாத இறுதிக்குள் சாதகமான முடிவு கிடைக்கும் என கருத்து தெரிவித்திருந்தார் காணி விடுவிப்பு இடம்பெறவில்லை.

நான் அறிந்த வகையில் வலி வடக்கில் இன்னும் விடுவிக்கப்படாமல் சுமார் 2000 ஏக்கருக்கு மேற்பட்ட தனியார் காணிகள் உள்ள நிலையில் அவற்றில் சில ஏக்கர்களை மட்டும் விடுவித்து மக்களை ஏமாற்றும் முயற்சிகள் இடம் பெற்று வருவதாக அறிகிறேன்.

அதேபோன்று பலாலி தனியார் காணிகளில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வருகின்ற பலாலி இராணுவ வைத்தியசாலையின் கட்டுமானங்களை நிறுத்துமாறு யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் எடுத்திருந்தோம்.

ரணிலின் மெய்ப்பாதுகாவலரை தாக்கிய ஒளிப்பதிவாளருக்கு பிணை!

ரணிலின் மெய்ப்பாதுகாவலரை தாக்கிய ஒளிப்பதிவாளருக்கு பிணை!

வைத்தியசாலையின் கட்டுமானங்கள்

ஆனால் தீர்மானத்தை மீறி அநுர அரசாங்கம் தனியார் காணிக்குள் இராணுவ வைத்தியசாலையின் கட்டுமானங்களை மிக துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காக தேர்தல் காலங்களில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அநுர தலையிலான அரசாங்கம் வலி வடக்கு மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.

வலி வடக்கு காணி விடுவிப்பு: அநுர அரசின் ஏமாற்று வாக்குறுதிகள் - கஜேந்திரகுமார் எம்பி சீற்றம் | Jaffna Valikamam North High Security Zone Issues

30 வருடங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 17 வருடங்களை கடக்கின்ற நிலையில் வலி வடக்கு மக்கள் தமது பூர்வீக நிலங்களுக்குள் செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலையில் வாடகை வீடுகளில் வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த மக்களுடைய வளமான விவசாயக் காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு பாரிய இலாபங்களை ஈட்டி வருகிறது.

இராணுவத்தினரால் தமிழ் மக்களுடைய காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் பெறப்பப்படும் வருமானம் திறைசேரிக்கு செல்கிறதா? அல்லது வலி வடக்கில் இராணுவ விரிவாக்களுக்கு பயன்படுத்தப்படுகிறதா என கேட்க விரும்புகிறேன்.

ஆகவே வலி வடக்கு தனியார் காணிகளை விரைவாக விடுவிப்பதோடு மக்களை ஏமாற்றுவதற்காக சில ஏக்கர்களை மட்டும் விடுவித்து ஏமாற்ற வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் - ஜனாதிபதிக்கு பறந்த மனு

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் - ஜனாதிபதிக்கு பறந்த மனு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023