யாழில் நிகழும் மாற்றம்: ஆபிரிக்கா கொண்டாடும் தமிழனின் வெற்றிப்பயணம்
யாழில் (Jaffna) மெலிஞ்சிமுனை மேற்கு பிரதேச மக்கள் தங்களது வளங்களை பாதுகாப்பதற்காகவும் மற்றும் இயற்கையை பாதுகாப்பதற்காகவும் பலதரப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதில் ஒன்றாக குறித்த பிரதேசத்தில் உள்ள குளங்கள் மக்களால் அவர்களது சொந்த புலம்பெயர் உறவுகளின் நிதியுதவிகளுடன் புணரமைக்கப்பட்டு வருகின்றது.
இந்த புணரமைப்பு நடவடிக்கைகள் இந்தியாவின் (India) நீரியல் சார்ந்த செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிமல் ராகவன் என்பரின் கண்காணிப்பின் கீழான ஒரு குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவர் பல நீர்நிலைகளை மீட்டெடுக்கும் சேவையை செய்து வருவதுடன் இந்தியா மற்றும் மற்ற நாடுகளிலும் பல நீர் நிலைகளை குறிப்பாக ஆப்ரிக்க நாடுகளில் மீட்டெடுத்துள்ளார்.
இந்தநிலையில் அவரின் கண்காணிப்பில் தமிழர் பிரதேசத்தில் இவ்வாறு ஒரு நடவடிக்கை இடம்பெற்று வருவது மிகவும் முக்கியமான விடயமாக கருதப்படுகின்றது.
இது தொடர்பிலும் , மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கை, புணரமைப்பு நடவடிக்கையின் அடுத்த கட்டம் மற்றும் பலதரப்பட்ட விடயம் தொடர்பில் அப்பிரதேச மக்கள் ஐபிசி தமிழுக்கு வழங்கிய கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
