கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்
புதிய இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு ரூ. 70 மில்லியன் இலஞ்சம் வழங்கப்பட்டது தொடர்பாக, கைது செய்யப்பட்ட கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவை அக்டோபர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகமவால் இன்று (24) குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இலஞ்ச ஆணைய அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
முதலாம் இணைப்பு
கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த ஆணைக்குழுவின் (CIABOC) விசேட விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் அவர் இன்று (24) காலை கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிறுவனத்திற்காக, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொழும்பு கோட்டை 'டிரான்ஸ்வொர்க் சதுக்கம்' (Transworks Square) நிலத்தை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கு உதவுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு 70 மில்லியன் ரூபாயை இலஞ்சமாகக் வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
இதேவேளை ஜானகி சிறிவர்தன இந்த 70 மில்லியன் ரூபாய் பணத்தை மூன்று தனித்தனி சந்தர்ப்பங்களில் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (24) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |