காடழிப்பிற்கான அனுமதியை வழங்கியவர் கோட்டாபயவே- குற்றம் சாட்டும் ஜே.வி.பி!

srilanka gotabhaya janatha vimukthi
By Vasanth Mar 24, 2021 04:04 PM GMT
Report

கோட்டாபய-மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் காடழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக ஜே.வி.பியினரால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, காடுகளை அழிப்பதற்கான அனுமதிகளை வழங்கியுள்ளதாக ஜே.வி.பி. குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிங்கராஜ, முத்துராஜ உள்ளிட்ட ஸ்ரீலங்காவின் பெறுமதிமிக்க காடுகள், தனியார் நிறுவனங்களுக்கான இடங்களுக்காக அழிக்கப்படுவதாக ஸ்ரீலங்காவின் தற்போதைய அரசாங்கம் மீது பாரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

இந்த விடயத்தை முன்னிலைப்படுத்தி கொழும்பு புறக்கோட்டையில் ஜே.வி.பியினர் நேற்றைய தினம் மாலை பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

ஓல்கொட் மாவத்தையில் ஆரம்பமாகிய இந்தப் பேரணி புறக்கோட்டை மத்திய தொடருந்து நிலையத்திற்கு முன்பாக வந்தடைந்த நிலையில், அங்கு மாநாடும் நடத்தப்பட்டது. இதன் போது பிமல் ரத்நாயக்க கருத்துத் தெரிவிக்கையில், இன்று பாரிய அளவில் காடழிப்புக்கள் இடம்பெறுகின்றன.

சூழல் பாதிப்பிற்கு எதிராக பேசுகின்றவர்கள் தீவிரவாதிகள் என்று அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவிக்கின்றார்.

அப்படியானால் காடழிப்பிற்கு எதிராக கருத்து வெளியிட்ட கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை மற்றும் காடழிப்பிற்கெதிராக வழக்கு தாக்கல் செய்துள்ள ஆதிவாசிகளின் தலைவரான வன்னிலா எத்தோவும் தீவிரவாதிகளா என்பதை கேட்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

வலப்பனைக்கு சென்ற அரச தலைவர் கோட்டாபய, ஜே.வி.பியினர் சமூக வலைத்தளங்கள் ஊடாக போலிப்பிரசாரங்களை செய்வதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஆனால் வன அழிப்பு போலிப்பிரசாரம் என்பதை தெரிவித்த நந்தசேன சேறுபூசும் முகநூலினை கோட்டாபயவின் ஊடகப்பிரிவு உருவாக்கி 06 நாட்களில் அதனை பேஸ்புக் முடக்கியது.

கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தின் பின் 20ஆம் திகதி வலப்பனை சென்று ஜே.வி.பியினர் மீது குற்றஞ்சாட்டினார். காடுகளை அழிப்பதற்காக கோட்டாபய இன்று அனுமதியளித்துள்ளார்.

எனினும் காடழிப்புக்களுக்கு எதிராக எமது போராட்டம் தொடரும் என்பதை அறிவிக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025