சர்வதேசத்தின் முக்கிய எதிர்பார்ப்பு! பாரிய கச்சா எண்ணெய் தொகுதியை வெளியிட ஆரம்பித்த ஜப்பான்
ஜப்பான் தனது அரசுக்குச் சொந்தமான கையிருப்புகளில் இருந்து 30 நாட்களுக்குத் தேவையான எண்ணெயை வெளியிடத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, மார்ச் 16 அன்று தொடங்கிய தனியார் துறை கையிருப்புகளில் இருந்தும் எண்ணெய் வெளியீடுகளுடன் சேர்த்து, மொத்தமாக 45 நாட்களுக்குத் தேவையான எண்ணெயை வெளியிடும் அதன் மிகப்பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
உற்பத்தி செய்யும் நாடுகளுடன் கூட்டாக வைத்துள்ள எண்ணெய் கையிருப்பில் இருந்து, இந்த மாத இறுதிக்குள் அதனை வெளியிடவும் டோக்கியோ திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் சனே டகாயிச்சி தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கிலிருந்து இறக்குமதி
ஜப்பான் தனது கச்சா எண்ணெயில் 90%க்கும் அதிகமானதை மத்திய கிழக்கிலிருந்து இறக்குமதி செய்கிறது.

எனினும், அந்நாட்டின் அரசாங்கம் இதுவரை எரிசக்தி சேமிப்புக் கட்டாயங்களை விதிக்கவில்லை.
மேலும், எரிபொருள் விலை ஒரு லிட்டருக்கு 190 யென் என்ற வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட பிறகு, ஜப்பான் ஒரு லிட்டருக்கு சுமார் 170 யென் என்ற அளவில் விலையைக் கட்டுப்படுத்த மானியங்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேவைப்படும் பட்சத்தில் மேலும் எண்ணெய் இருப்புகளை வெளியிட தங்கள் தரப்பு தயாராக இருப்பதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |