இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் சிறிலங்கா அரச தலைவரிடம் தெரிவித்துள்ள விடயம்!
எந்தவொரு தருணத்திலும் இலங்கைக்கான ஒத்துழைப்பு வழங்கத் தான் முயற்சிப்பதாக தனது சேவைக் காலத்தை நிறைவு செய்துள்ள இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் சிறிலங்கா அரச தலைவரிடம் தெரிவித்தார்.
தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அக்கிரா அரச தலைவரை இன்று சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் போது கருத்து தெரிவித்த அவர்,
ஆறு இலட்சம் அஸ்ட்ரசெனிக்கா தடுப்பூசிகளை ஜப்பானிலிருந்து பெற்றுக்கொள்வதற்கும் கொவிட் தொற்றொழிப்பை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கும், தூதுவரால் பல்வேறு வழிமுறைகளில் இந்நாட்டுக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்ட சேவைகளுக்கு, அரச தலைவர் இதன்போது பாராட்டு தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை பலப்படுத்திக்கொண்டு, தேவைப்படும் எந்தவொரு தருணத்திலும் இலங்கைக்கான ஒத்துழைப்பு வழங்கத் தான் முயற்சிப்பதாக, ஜப்பான் தூதுவர் தெரிவித்தார்.