சிறிலங்காவிற்கு அதிர்ச்சி கொடுத்த ஜப்பானிய நிறுவனம்..! இடைநிறுத்தப்பட்ட நிதியுதவி
இலங்கைக்கான திட்டக்கடன் ஒன்றை ஜப்பானிய ஜெய்க்கா சர்வதேச கூட்டுத்தாபன நிதி நிறுவனமும் இடைநிறுத்தியுள்ளது.
ஜெய்க்கா சர்வதேச கூட்டுத்தாபன நிதி நிறுவனமானது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை விரிவாக்கும் திட்டத்துக்காக நிதியுதவியை வழங்கி வந்தது.
இலங்கை அரசாங்கம், தாம் சர்வதேச நாடுகளில் இருந்து பெற்ற கடன்களை திருப்பிச்செலுத்தப்போவதில்லை என்று கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது.
இதனால் ஜெய்க்கா நிறுவனமும் தமது திட்டக்கடனான 570 மில்லியன் டொலர் நிதியுதவியை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்த கடன் திட்டத்தின்கீழ் ஜப்பானின் தாய்செய் நிறுவனம், விமான நிலையத்தின் இரண்டாவது முனைய விஸ்தரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில் இலங்கை தமது கடன் மறுசீரமைப்பு செயல்முறையை முடிவுறுத்தும் வரை இந்த நிதியை இடைநிறுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக ஜெய்க்கா அறிவித்துள்ளது.