முல்லைத்தீவில் இராணுவம் மீதான குற்றச்சாட்டு: ஜீவன் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கை இராணுவத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு முழு ஆதவு வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இராணுவ வீரர்களால் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த கடையடைப்பு போராட்டம் ஓகஸ்ட் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளளது.
மனிதாபிமானமற்ற செயற்பாடு
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஜீவன், “கடந்த 07 ஆம் திகதியன்று, முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் காவல்துறை பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டுப் பகுதியில் 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற இளம் குடும்பஸ்தர், இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனதாக தேடப்பட்டு வந்தார்.
பின்னர் கடந்த சனிக்கிழமை (09) அன்று, அவரது சடலம் முத்துஐயன்கட்டுக் குளத்திலிருந்து மீட்கப்பட்டது.
நீதிக்கான கோரிக்கையிலும், இராணுவத்தின் அநீதியான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நடைபெறவுள்ள இந்த ஹர்த்தாலுக்கு, எனது ஒற்றுமையையும்உறுதியான ஆதரவையும் வெளிப்படுத்துகின்றேன்.
யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த பின்பும், இவ்வாறான மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் நிகழ்வது மிகவும் வருத்தமளிக்கிறது இதனை ஏற்றுக்கொள்ள முடியாது" என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்
