அதிபர் ரணில் தலைமையில் பாரத் – லங்கா வீட்டுத்திட்டம்
இதன் பணிகளை எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
பாரத் லங்கா வீட்டுத் திட்டம்
நுவரெலியா, கண்டி, பதுளை, மாத்தளை, கேகாலை, குருணாகல், இரத்தினபுரி, காலி, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 45 இடங்களில் நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பண விழா நடைபெறவுள்ளது.
இதன்பிரதான நிகழ்வு நாளை ( 19) காலை 10 மணிக்கு அதிபர் செயலகத்தில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோரின் பங்கேற்புடன் நிகழ்நிலை மூலம் இடம்பெறும்.
அதேபோல 45 தோட்டங்களுக்கும் மக்கள் பிரதிநிதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகவும் நேர்த்தியான முறையில் அமைச்சர் ஜீவன் தொண்டமானால் நெறிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்களிடம் திறமை உள்ளது: ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை - ஜெய்சங்கர் அதிரடி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |