வெளிநாட்டு முதலீட்டாளர்களை வடக்கிற்கு அழைக்கின்றார் வடமாகாண புதிய ஆளுநர்
sri lanka
people
northern
By Shalini
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வடமாகாணத்தில் முதலீடுகளை செய்ய முன்வருமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகளுக்கு புதிய தளம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், வடக்கில் முதலிடுமாறு அவர் அழைத்துள்ளார்.
ஊடக சந்திப்பு ஒன்றின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறியிருப்பதாவது,
வடக்கில் வாழும் மக்களின் வாழ்க்கை சுமையைக் குறைக்கும் வகையில் அரசாங்கம் வழங்கும் அனைத்து நிவாரணங்களையும் வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.
வடமாகாண ஆளுநராக தாம் நியமிக்கப்பட்ட நாளிலில் இருந்து பெரும்பாலான நாட்களிலும் பெரும்பாலான வாரங்களிலும் தனது மாகாண மக்களுக்கு சேவையாற்றுவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.