குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிய ஜெரோம் பெர்னாண்டோ!
இலங்கையின் சர்ச்சைக்குள்ளான போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பியுள்ள நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மதச்சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ள இவர் சிங்கப்பூர் சென்ற நிலையில் நேற்று (29) அதிகாலை இலங்கை வந்தடைந்துள்ளார்.
ஜெரோம் பெர்னாண்டோ, நாடு திரும்பியதும் கைது செய்யப்பட வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் மீள பெற்றிருந்தது.
குற்றப்புலனாய்வு திணைக்களம்
ஜெரோம் பெர்னாண்டோ, தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவுக்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
மேலும், அவர் இலங்கைக்கு திரும்பிய 48 மணித்தியாலங்களில் சிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்க வேண்டுமெனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்தவகையில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று (30) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |