ட்ரம்ப் வெளியிட்ட 60 ஆண்டு கால ரகசியம்: இலங்கையிலும் செயற்பட்டிருந்த ரகசிய முகாம்!!
சுமார் 60 ஆண்டுகளாக ரகசியமாகவிருந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி (John F. Kennedy) படுகொலை தொடர்பான 80,000 பக்கங்களுக்கும் அதிகமான ரகசிய கோப்புகளை ட்ரம்ப நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அத்தோடு, உலகெங்கிலும் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பால் இயக்கப்படும் பல ரகசிய முகாம்களைப் பற்றியும் குறித்த கோப்புக்களால் தெரியவந்துள்ளது.
கென்னடி படுகொலை
1963 ஆம் ஆண்டில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி படுகொலை தொடர்பான 2,000 ரகசிய கோப்புகளுடன் 80,000க்கும் மேற்பட்ட பக்கங்களையும் ட்ரம்ப நிர்வாகம் இதுவரை வெளியிட்டுள்ளது.
கென்னடி படுகொலையை விசாரிக்க 1964 இல் நியமிக்கப்பட்ட வாரன் ஆணைக்குழு, துப்பாக்கிதாரி லீ ஹார்வி ஓஸ்வால்டால் ஜனாதிபதி கென்னடி படுகொலை செய்யப்பட்டார் என்று முடிவு செய்தது.
ஜான் எஃப். கென்னடி தனது மனைவி ஜாக்குலினுடன் டெக்சாஸின் டல்லாஸில் உள்ள ஒரு தெருவில் ஒரு லிமோசினில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, லீ ஹார்வி ஓஸ்வால்டால் என்ற துப்பாக்கிதாரியால் குறிவைக்கப்பட்டார்.
அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு
2017 ஆம் ஆண்டில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த படுகொலை விசாரணை தொடர்பான தகவல்களைக் கொண்ட 88% ஆவணங்களை வெளியிடக்கூடிய தகவல் என தீர்மானித்தார், ஆனால் அதிலும் ஆயிரக்கணக்கான பிற ஆவணங்கள் 'தேசிய பாதுகாப்பு' என்ற சாக்குப்போக்கின் கீழ் ரகசியமாக வைக்கப்பட்டன.
இந்த நிலையில், நேற்று தொடர்புடைய பல ஆவணங்கள் வெளியிடப்பட்டன, அவற்றில் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (CIA) உலகம் முழுவதும் ரகசிய தளங்களைக் கொண்டிருப்பதையும் கோப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.
கொழும்பில் ரகசிய முகாம்
இது தொடர்பாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைகள், இந்த ரகசிய முகாம்களில் ஆசிய பிராந்தியத்தில் உள்ள 5 நாடுகளும் அடங்கும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளன.
அதன்போது, இரண்டு இந்திய நகரங்களும் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவில் உள்ள பல நகரங்களுடன் NE பிரிவு என்ற துணைத் தலைப்பின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன, இதன் கீழ் இலங்கையில் கொழும்பு நகருக்கு அருகில் ரகசிய முகாம்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கூடுதலாக, ஏதென்ஸ், கிரீஸ், பெய்ரூட், லெபனான், ராவல்பிண்டி, பாகிஸ்தான், அங்காரா, இஸ்தான்புல், துருக்கி மற்றும் தெஹ்ரான், ஈரானும் சம்பந்தப்பட்ட கோப்புக்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்