அரச வேலை பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சுகாதார அமைச்சு (Ministry Of Health) உள்ளிட்ட பல அரச நிறுவனங்களில் வேலை வழங்குவதாக உறுதியளித்து பல கோடி ரூபா மோசடி நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மோசடி தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் (Criminal Investigation Department) நேற்று (13.5.2024) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
குறித்த மோசடி சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
வேலைவாய்ப்பு மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மக்களிடம் இருந்து பல கோடி ரூபா மோசடி செய்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டி, பின்னதுவ ஹேவே, அம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் அனுர என்ற (பிரியந்த) நபரே இந்த மோசடிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயத்தை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப்பிரிவு பிரதம பொலிஸ் பரிசோதகர் நளினி திஸாநாயக்க (Nalini Dissanayake) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
மோசடி நபர்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்து வரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருன்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |