யாழ்ப்பாணத்தில் அரச உத்தியோகத்தரின் விபரீத முடிவு!
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளளார்.
குறித்த உத்தியோகத்தர் பணி இடமாற்றம் காரணமாக ஏற்பட்ட மனவிரக்தியால், இன்றையதினம் (11)தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
இச்சம்பவத்தில் டச்சு வீதி மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த பேரம்பலம் புனிதா (வயது 49 திருமணமாகவில்லை) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பணி இடமாற்றம்
இவர் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து வரும் நிலையில் இவருக்கு இடமாற்றம் கிடைத்தது.
எனினும் இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கு முயற்சித்துள்ளார்.
ஆனால் முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பதனால் இன்றையதினம் அவரது இல்லத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.
மரண விசாரணை
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |