இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு விசேட செய்தி
corona
sri lanka
people
lebanon
By Shalini
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் வேலை வாய்ப்புக்காக லெபனானுக்கு செல்லலாம் என லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
லெபனான் நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலைக்காக லெபனானுக்குள் நுழைய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது, லெபனானில் கொரோனா தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருப்பதால், மீண்டும் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, லெபனானுக்கு வேலைக்காக செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டோர், உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுக்கொள்வது கட்டாயமாகும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.