படிக்கட்டுகளில் தடுமாறி விழுந்த பைடன்! வைரலாகும் காணொளி
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமானத்தில் ஏறும்போது தொடர்ந்து மூன்று முறை தடுக்கி விழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா - அட்லாண்டாவில் மசாஜ் சென்டர் ஒன்றில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக, அங்குள்ள ஆசிய - அமெரிக்க சமூகத்தினரிடம் பேசுவதற்கு ஜோ பைடன் வோஷிங்டனில் இருந்து நேற்று புறப்பட்டார்.
விமானப் படிக்கட்டுகளில் ஏறும் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மூன்று முறை தடுக்கிய நிலையில் ஒரு முறை கீழே விழுந்தார். விமானத்தின் படிக்கட்டுகளில் அவசரமாக அவர் ஏறியதால் 2 முறை தடுக்கியதுடன், கடைசியாக தடுக்கி விழுந்தே விட்டார். விழுந்து, எழுந்து முழங்கால்களை தடவிக்கொண்டு, தொடர்ந்து ஏறி விமானத்தின் கதவுக்கருகே நின்று, ஒரு சல்யூட் வைத்துவிட்டு உள்ளே சென்று மறைகிறார் பைடன்.
ஆனால் குறித்த காணொளியில், அவர் மூன்று முறை தடுமாறியும், மூன்றாவது முறை விழுந்தும் யாரும் அவருக்கு உதவச் சென்றது போல தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.