தாக்கப்பட்ட ஊடகவியலாளரின் வீடு : கிளிநொச்சி ஊடக அமையம் வன்மையான கண்டனம்

Jaffna Kilinochchi Journalists In Sri Lanka Crime
By Laksi Jun 14, 2024 07:05 AM GMT
Report

யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பது அவரது ஊடகப்பணியை அச்சுறுத்தலுக்குள்ளாக்கி அவரை அடிபணிய வைக்கும் நடவடிக்கையே என கிளிநொச்சி ஊடக அமையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இத் தாக்குதல் முயற்சிக்கு  ஊடக அமையம் தனது வன்மையான கண்டனங்களையும் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் (Jaffna) - அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று (13) அதிகாலை புகுந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்...பின்னணியில் அரச புலனாய்வுப் பிரிவு: கஜேந்திரன் சந்தேகம்

யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்...பின்னணியில் அரச புலனாய்வுப் பிரிவு: கஜேந்திரன் சந்தேகம்


ஊடகத் தொழில்

இதனை கண்டித்து கிளிநொச்சி ஊடக அமையம் வெளியிட்ட செய்தி குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இச் செய்திகுறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தாக்கப்பட்ட ஊடகவியலாளரின் வீடு : கிளிநொச்சி ஊடக அமையம் வன்மையான கண்டனம் | Journalist Home Attack Jaffna Kilinochchi Media

”இலங்கையை பொறுத்தவரை ஊடகவியலாளர்கள் தங்களது கடமைகளின் பொருட்டு அதிகளவு சவால்களையும், நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் என்பது மிக மோசமானதாக காணப்படுகிறது. ஆனாலும் அவர்கள் இவற்றையெல்லாம் கடந்து தங்களது கடமைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

பிக்குமாருக்கு வழங்கப்படவுள்ள புலமைப்பரிசில் : கல்வி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

பிக்குமாருக்கு வழங்கப்படவுள்ள புலமைப்பரிசில் : கல்வி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

சட்ட நடவடிக்கை

ஊடகத் தொழில் என்பது முக்கியமாக பிராந்திய செய்தியாளர்களின் பொருளாதார நிலைமை என்பது கவலைக்குரியது. அவர்களுக்கு ஊடகத் தொழில் மூலம் கிடைக்கின்ற பொருளாதார நன்மை சொற்பமானதே.

தாக்கப்பட்ட ஊடகவியலாளரின் வீடு : கிளிநொச்சி ஊடக அமையம் வன்மையான கண்டனம் | Journalist Home Attack Jaffna Kilinochchi Media

இந்த நிலையில் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களது சொத்துக்களுக்கு அழிவை ஏற்படுத்தி அச்சுறுத்தும் செயற்பாடுகள் மன்னிக்க முடியாத நடவடிக்கைகள் ஆகும். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும்.

அத்தோடு  இத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் சட்டநடவடிக்கை என்பது இனிவரும் காலங்களில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறாதிருப்பதனை உறுதி செய்வதோடு, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும்“ என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் பரிதாப மரணம்

தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் பரிதாப மரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Gallery
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026