ஊடகவியலாளர் நிலாந்தன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Sri Lanka Police Batticaloa Journalists In Sri Lanka
By Sathangani Jan 20, 2025 11:26 AM GMT
Report

ஊடகவியலாளர் செல்வக்குமார் நிலாந்தன் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் ஐந்தாம் திகதிக்கு (2025.05.05) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் தொடர்பாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களில் செய்திகளை பதிவிட்டதாக கூறி கடந்த 2019.02.21ம் திகதி தனது அரச கடமைக்கு இணையத்தளம் ஊடாக குந்தகம் விளைவித்தார், அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என ஏறாவூர் காவல் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய ஊடகவியலாளர் நிலாந்தன் மீது ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கு விசாரணையானது கடந்த நான்கு வருடங்களாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத நிலையில் இன்றைய (20/01/2025) தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்த நிலையில் வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் ஐந்தாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதிய அரசாங்கத்திடம் கோரிக்கை

கடந்த காலங்களில் செங்கலடி பிரதேச செயலாளராக இருந்து தற்போது கிழக்கு மாகாண சபையில் நிர்வாக பிரதி செயலாளராக கடமையாற்றி வரும் நல்லையா வில்வரெட்ணம் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள், ஊழல் குற்றச்சாட்டுக்கள், உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக பிரதேச செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் அது குறித்து ஊடகங்களில் செய்திகளை பிரசுரித்த ஊடகவியலாளர் மீது பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஏறாவூர் காவல்துறையினர் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் நிலாந்தன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு! | Journalist Nillanthan S Case Hearing Postponed

முன்னாள் செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் குறித்த இலஞ்ச ஊழல் பாலியல் குற்றச்சாட்டுக்களை விசாரணை நடாத்தாத அரசு அது குறித்த செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து ஊடகவியலாளர்களின் கடமைக்கு பங்கம் விளைவித்து இலஞ்ச ஊழல் குற்றம் புரியும் அரச அதிகாரிகளை பாதுகாக்கும் வகையில் காவல்துறையினர் செயற்படுவது தொடர்பாக புதிய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என ஊடக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊடகவியலாளர் நிலாந்தன் மீதான அடக்கு முறைகள் குறித்து சுயாதீன விசாரணை ஒன்றை நடாத்துவதற்கு புதிய அரசாங்கம் முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் - இறுதிச்சடங்கு தொடர்பில் தகவல்

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் - இறுதிச்சடங்கு தொடர்பில் தகவல்

மன்னார் துப்பாக்கிச்சூட்டு விவகாரம் : நால்வர் அதிரடியாக கைது

மன்னார் துப்பாக்கிச்சூட்டு விவகாரம் : நால்வர் அதிரடியாக கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026