பிரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கு விசாரணை : மனைவியின் அவசர வேண்டுகோள்

United Nations Missing Persons Journalists In Sri Lanka Prageeth Eknaligoda
By Sathangani Jul 30, 2025 04:22 AM GMT
Report

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட (Prageeth Eknaligoda) காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தி, இவ்வாண்டு இறுதிக்குள் முடிவுறுத்தும்படி இலங்கையிடம் வலியுறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிடம் பிரகீத்தின் மனைவி சந்தியா எக்னெலிகொட இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் 29 ஆவது கூட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 22 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 3 ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.

குடும்பத்துடன் உயிர்மாய்த்த பிரதேச சபை உறுப்பினர் : மரணம் தொடர்பில் வெளியான தகவல்கள்

குடும்பத்துடன் உயிர்மாய்த்த பிரதேச சபை உறுப்பினர் : மரணம் தொடர்பில் வெளியான தகவல்கள்

 நீதிமன்ற வழக்கு விசாரணை

இக்கூட்டத்தின்போது சகல நபர்களையும் வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச பிரகடனத்தின் கீழ் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பது பற்றி அக்குழுவினால் மீளாய்வு செய்யப்படும்.

பிரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கு விசாரணை : மனைவியின் அவசர வேண்டுகோள் | Journalist Prageeth Ekneligoda Disappearance Case

இந்நிலையில் வலிந்து காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட, பிரகீத் காணாமலாக்கப்பட்ட விவகாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நீதிமன்ற வழக்கு விசாரணை என்பன பற்றிய முழுமையான விபரங்களை அக்குழுவுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

நீதிக்கான தனது போராட்டத்தைத் தமக்கான அச்சுறுத்தலாகக் கருதிய சிலர் நீதிமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தன்னை அச்சுறுத்தியதாக வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவுக்கு அனுப்பிவைத்துள்ள ஆவணங்களில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜப்பானில் அதிகரிக்கும் சுனாமி அலைகள்! NHK விசேட வேர்ல்ட் அறிக்கை

ஜப்பானில் அதிகரிக்கும் சுனாமி அலைகள்! NHK விசேட வேர்ல்ட் அறிக்கை

காணாமலாக்கப்பட்ட விவகாரம் 

அத்துடன் தான் எத்தனை சவால்களைக் கடந்திருந்தாலும், எதிர்வருங்காலங்களில் இன்னமும் பல சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தாலும், பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறுகோரி தான் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கு விசாரணை : மனைவியின் அவசர வேண்டுகோள் | Journalist Prageeth Ekneligoda Disappearance Case

அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட தரப்பு என்ற ரீதியில் சமூகத்தின் மத்தியிலும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு கோரியதை தமக்கு அச்சுறுத்தலாகக் கருதிய தரப்பினராலும் தான் முகங்கொடுக்கநேர்ந்த ஒடுக்குமுறைகள் மற்றும் கண்காணிப்புக்கள் குறித்தும் சந்தியா எக்னெலிகொட அதில் விரிவாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தநிலையில் பின்னணியில் பிரகீத் எக்னெலிகொட வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தி, இவ்வாண்டு இறுதிக்குள் முடிவுறுத்தும்படி இலங்கையிடம் வலியுறுத்துமாறு அக்குழுவிடம் சந்தியா எக்னெலிகொட வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதியோருக்கான ஜூலை மாத கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்

முதியோருக்கான ஜூலை மாத கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021