ஈழத்து ஊடக ஆளுமை சத்தியமூர்த்தியின் நினைவு தினம்
ஈழத்து ஊடகப்பரப்பின் தவிர்க்கமுடியாத ஆளுமை நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் நினைவு தினம் இன்று(12) அனுஷ்டிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பை பூர்வீகமாக கொண்ட இவர் தனது தாயகத்தின் ஊடக பரப்பில் தனித்துவமான தனது பங்களிப்புகளால் பெரிதும் அறியப்பட்டவர்.
தனக்கான பணியை ஆத்மார்த்தமாக உணர்ந்தவராய் ஒரு ஊடகன் என்ற வரையரைக்கு உட்பட்டு தமிழின நசுக்கல்களையும் தமிழ் மக்களின் வலி நிறைந்த வாழ்வினையும் ஊடக வாயிலாக உலகம் அறிய செய்தவர்.
தாயகத்தில் செயற்பட்ட பல்வேறு ஊடக நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிய சத்தியமூர்த்தி செய்தி பார்வை தொகுப்பு அரசியல் கலந்துரையாடல்கள் மற்றும் உள்ளூர் நடப்புக்கள் போன்ற பரிமானங்களில் அதிகம் பேசப்பட்ட ஒருவராக காணப்பட்டுள்ளார்.
ஊடகத்துறையில் பெரும் பணியாற்றிய ஆளுமையின் நினைவு தினம் தொடர்பில் ஐபிசி தமிழ் தரும் காணொளி பதிவு கீழ்வருமாறு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)